அளவிட முடியாத பாசம் கொண்டு
சின்ன பாலா என்னை தேடி
மண்ணில் பிறந்தாயே
அளவிட முடியாத ஆசை கொண்டு
செல்ல பாலா உன்னை தேடி
உள்ளம் கலந்தேனே
ஆரிராரிரோ ஆரிராரிரோ
1. சுமைகள் சுமந்து சோர்ந்து மனதை
உன் கருணை விழிகள் கரை ஏற்றும்
விழுந்து கிடக்கும் மனித மாண்பை
உன் மழலை மொழிகள் உயிரேற்றும்
ஒளியாய் என்னில் உதித்த தேவா
இமைகள் மூடி கண்ணுரங்கு
மகிமை ராஜா மழலை ரோஜா
இதய மடியில் நீ உறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ
2. மீட்பை தேடும் மாந்தர்க்கெல்லாம்
உன் பிறப்பு என்றும் மகிழ்வை தரும்
அன்பை நாடும் குடும்ப உறவில்
உன் உதயம் நாளும் உயர்வை தரும்
தாயை போல தேற்றும் தேவா
சேயாய் வந்தாய் கண்ணுறங்கு
மண்ணில் பிறந்த விண்ணின் சுதனே
கண்ணின் மணியே கண்ணுறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ
Alavida Mudiyaatha Paasam Kondu
Sinna Paalaa Ennai Theedi
Mannil Piranthaayee
Alavida Mudiyaatha Aasai Kondu
Sella Paalaa Unnai Theedi
Ullam Kalantheenee
Aariraariroo Aariraariroo
Sumaikal Sumanthu Soornthu Manathai
Un Karunai Vizhikal Karai Eerrum
Vizhunthu Kidakkum Manitha Maanpai
Un Mazhalai Mozhikal Uyireerrum
Oliyaay Ennil Uthiththa Theevaa
Imaikal Muudi Kannurangku
Makimai Raajaa Mazhalai Roojaa
Ithaya Madiyil Nee Urangku
Aariraariroo Aariraariroo
Miidpai Theedum Maantharkkellaam
Un Pirappu Enrum Makizhvai Tharum
Anpai Naadum Kudumpa Uravil
Un Uthayam Naalum Uyarvai Tharum
Thaayai Poola Theerrum Theevaa
Seeyaay Vanthaay Kannurangku
Mannil Pirantha Vinnin Suthanee
Kannin Maniyee Kannurangku
Aariraariroo Aariraariroo