Palm sunday in tamil called kuruthu nyairu. Palm Sunday Liturgy is very important for the Holy Week celebrations. Here in this post, we shall see the 4 important songs that is used in the Palm sunday processions. Paim sunday liturgy is quite unknown to the people, here I have included the song and lyrics of the palm sunday procession in tamil. Palm sunday procession hymn in tamil are very emotional and feeling full.
ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம்
ஆண்டவரே உம்மை எதிர் பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம் இயேசு
இரட்சகரே எழுந்தருளும்.
ஓசானா தாவீதின் புதல்வா - ஓசானா ஓசானா ஓசானா
மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசானா....
அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தாபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர் - ஓசானா....
தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமரெனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசானா....
கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்த தண்ணீர் - அதை
சுத்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் - ஓசானா....
புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுத்தினீர் அருள் மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே - ஓசானா....
குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீரே - ஓசானா....
மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு
மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றொர் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே - ஓசானா....
யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம்
யூதர் ராஜனென்று முடிபெற்றீர்
யெருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசனே அரசாள்வீர் - ஓசானா....
பாவிகளைகத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே - ஓசானா....
கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே - ஓசானா....
உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே - ஓசானா....
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகளைப் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர்கொண்டனரே.
மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன,
பூவுலகும் அதில்வாழும் குடிகள் யாவரும் அவர்தம் உடைமையே,
ஏனென்றால், கடல்களின்மீது பூவுலகை நிலைநிறுத்தியவர் அவரே,
ஆறுகளின்மீது அதை நிலைநாட்டியவர் அவரே.
ஆண்டவரது மலைமீது ஏறிச்செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவன் யார்?
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன்.
பயனற்றதில் தன் மனத்தைச் செலுத்தாதவன்,
தன் அயலானுக்கு எதிராகவஞ்சகமாய் ஆணையிடாதவன்.
மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்:
அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ்பாடி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் அண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர்,
உலகுக்கெல்லாம் பேரரசர்.
மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்.
நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்.
தாம் அன்புசெய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.
இவனே ஆண்டவரிடம் ஆசிபெறுவான்,இவனே தன்னைக் காக்கும்
ஆண்டவரிடம் மீட்பு அடைவான்.
இறைவனைத் தேடும் மக்களின் இதுவே, யாக்கோபின் கடவுளது
திருமுகம் நாடுவோர் இவர்களே.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்,
பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே -
இவர்.போரில் வல்லவரான கொண்ட ஆண்டவரே இவர்.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.
பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
சேனைகளின் ஆண்டவரே இவர்.
மாட்சிமிகு மன்னர் இவரே."
கிறிஸ்து அரசே,இரட்ஷகரே,
மகிமை, வணக்கம், புகழ் உமக்கே:
எழிலார் சிறுவர் திரள் உமக்கு
அன்புடன் பாடினர்: "ஓசான்னா!"
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: இஸ்ராயேலின் அரசர் நீர்,
தாவிதின் புகழ்சேர் புதல்வர் நீர்,
ஆசிபெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ்
அழிவுறும் மனிதரும் படைப்புகளும்
யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்;
செபமும் கீதமும் காணிக்கையும் கொண்டு
யாம் இதோ வருகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே:
ஆட்சி செய்திடும் உமக்கன்றே யாம்
இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: அவர்தம் பக்தியை ஏற்றீரே,
நலமார் அரசே, அருள் அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர்
எங்கள் பக்தியும் ஏற்பீரே.
எல். கிறிஸ்து அரசே.....
ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில்,
எபிரேயச் சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்.
குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!"
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
எருசலேம் நகருக்கு இயேசுபிரான்
வருவதைக் கேட்ட மக்களெலாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே.
குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!"
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
Thank You Guys I hope this Songs in Palm Sunday Procession in Tamil must be very useful. Stay tuned for the Latest updates.